உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 3 கிலோ தங்க நகைகள் ஆம்னி பஸ்சில் கொள்ளை

3 கிலோ தங்க நகைகள் ஆம்னி பஸ்சில் கொள்ளை

சங்ககிரி:பேக்கரியில் நிறுத்தப்பட்ட ஆம்னி பஸ்சில், 3 கிலோ தங்க நகைகள் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கோவையை சேர்ந்த சீனிவாசன், தங்க நகைகள் செய்யும் பட்டறை வைத்துள்ளார். இவர் வீட்டின் மாடியில் தங்கி, பட்டறையில், 25 ஆண்டுகளாக வேலை செய்து வருபவர் சங்கர், 44. இவர், பட்டறையில் செய்யப்படும் நகைகளை டெலிவரி செய்வார். புதுச்சேரியில் உள்ள கடைக்கு, நகைகளை கொண்டு செல்ல, பட்டறை உரிமையாளர் சீனிவாசன் பெயரில், 'கலைமகள்' என்ற ஆம்னி பஸ்சில், நேற்று முன்தினம் கோவையில் இருந்து புதுச்சேரிக்கு சங்கர் சென்றார். அதிகாலை 12:45 மணிக்கு சங்ககிரி டோல்கேட் அருகில் பேக்கரியில் பஸ் நின்றது. நகைகள் கொண்டு வந்த பையை வைத்து விட்டு, பஸ்சை விட்டு இறங்கிய சங்கர், இயற்கை உபாதையை கழித்துவிட்டு, பஸ்சில் ஏறி பார்த்தபோது, 3 கிலோ நகைகளுடன் பை மாயமாகி இருந்தது. இது குறித்த புகாரில், சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர். மாயமான நகைகளின் மதிப்பு, 2.50 கோடி ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ