உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெயின்டரை தாக்கிய 3 பேர் கைது

பெயின்டரை தாக்கிய 3 பேர் கைது

சேலம்: சேலம், சின்னதிருப்பதி காந்தி நகரை சேர்ந்த, பெயின்டர் ரமேஷ், 38. இவரது மைத்துனர் விஷ்வா, கடந்த, 5 இரவு வீட்டுக்கு வராததால், அவரை தேடி ரமேஷ் சென்றபோது, விஷ்வா, அவரது நண்பர்கள் ஆனந்தன், 23, சிவானந்தம், 21, சண்முகம், 24, ஆகியோர் மது அருந்திக்கொண்டிருந்தனர். இதுகுறித்து ரமேஷ், விஷ்வாவின் நண்பர்களிடம் கேட்டுள்ளார். அதில் வாக்குவாதம் ஏற்பட்டு, விஷ்வாவின் நண்பர்கள், கட்டையால் ரமே ைஷ தாக்கினர். காயமடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி கன்னங்குறிச்சி போலீசார், ஆனந்தன், சண்முகம், சிவானந்தம் ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை