மேலும் செய்திகள்
புகையிலை பொருள் பறிமுதல்
22-Apr-2025
வாழப்பாடி: வாழப்பாடி, முத்தாகவுண்டனுாரில் நேற்று முன்தினம், வாழப்பாடி வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் வனத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஆம்னி காரை சோதனை செய்ததில், மான் கொம்புகள் கடத்தி வந்தது தெரிந்தது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பழனிமுத்து, 42, திருவள்ளூர் மாவட்டம் வல்லுார், அத்திப்பட்டு இந்திரச்செல்வன், 48, கோவை வெங்கடேஷ், 51, என தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், மான் கொம்புகளை பறிமுதல் செய்து, 3 பேருக்கும் தலா, 70,000 ரூபாய் அபராதம் வசூலித்து எச்சரித்து அனுப்பினர்.
22-Apr-2025