உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போலீசார் 32 பேர் இடமாற்றம்

போலீசார் 32 பேர் இடமாற்றம்

ஆத்தூர்: சேலம் மாவட்டத்தில் பல்வேறு புகாருக்கு ஆளான ஏழு எஸ்.ஐ., 13 எஸ்.எஸ்.ஐ., மற்றும் போலீசார் என 32 பேரை ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்து சேலம் எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.சேலம் மாவட்டத்தில் உள்ள 31 போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு புகார் அளித்து ஆளான எஸ்.ஐ., எஸ்.எஸ்.ஐ., மற்றும் போலீசார் மீது விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், சேலம் எஸ்.பி., கவுதம்கோயல், ஒரே நாளில் 7 எஸ்.ஐ., 13 எஸ்.எஸ்.ஐ., உட்பட மொத்தம் 32 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதில், கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் நான்கு எஸ்.எஸ்.ஐ., மற்றும் இரண்டு போலீசார் என ஆறு பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை