உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குப்பை கொட்ட எதிர்ப்பு 36 விவசாயிகள் கைது

குப்பை கொட்ட எதிர்ப்பு 36 விவசாயிகள் கைது

இடைப்பாடி: இடைப்பாடி அருகே அரசிராமணி டவுன் பஞ்சாயத்தில் சேகரிக்-கப்படும் குப்பை, குறுக்குப்பாறையூரில் கொட்டப்படுகிறது. ஆனால் மக்கள் வசிக்காத பகு-தியில் கொட்டக்கோரி, ஒரு மாதமாக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று அப்பகுதியில் குப்பை கொட்ட வந்த-போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, குப்பை கொட்டக்கூடாது என கோஷம் எழுப்பினர். அவர்களிடம் பேச்சு நடத்திய போலீசார், சேலம் மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலர் ராமமூர்த்தி, சங்ககிரி தாலுகா செயலர் ராஜேந்திரன் உள்ளிட்ட விவசாய சங்கத்தினர், விவசாயிகள் என, 36 பேரை கைது செய்தனர். தொடர்ந்து குள்ளம்பட்டியில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.உள்ளிருப்பு போராட்டம்ஆனால் வெளியேற மாட்டோம் எனக்கூறி இரவு, 10:00 மணிக்கு சமுதாய கூடத்திலேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின் செயல் அலுவலர் தம்பிதுரை, போலீசார் பேச்சு நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட, 10:00 மணிக்கு விவசாயிகள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை