உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மகளிர் உரிமைத்தொகை 3,756 பேர் விண்ணப்பம்

மகளிர் உரிமைத்தொகை 3,756 பேர் விண்ணப்பம்

சேலம், சேலம் மாவட்டத்தில், இரண்டாவது நாளாக நேற்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், ஆறு இடங்களில் நடந்தது. இடங்கணசாலை நகராட்சி, ஆட்டையாம்பட்டி பேரூராட்சி, சன்னியாசிகுண்டு, அம்மாபாளையம், சந்தியூர், பாரப்பட்டி, ஆலடிப்பட்டி, சிங்கிபுரம், பொன்னாரம்பட்டி ஆகிய ஊராட்சி மக்களுக்கு முகாம் நடத்தப்பட்டது. முகாமில் அடிப்படை வசதிகள் குறித்து, கலெக்டர் பிருந்தாதேவி நேரில் ஆய்வு செய்தார். அதன்பின் அவர் கூறுகையில், ''முதல்நாளில், 6 இடங்களில் நடந்த முகாமில், 2,354 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மகளிர் உரிமைத்தொகை கேட்டு, 3,756 பேர் மனு அளித்துள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !