உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தீபாவளி முன்பணம் பெற முடியாமல் துவக்கப்பள்ளி ஆசிரியர் 38 பேர் தவிப்பு

தீபாவளி முன்பணம் பெற முடியாமல் துவக்கப்பள்ளி ஆசிரியர் 38 பேர் தவிப்பு

மேட்டூர்:அரசு கருவூல கணினி பதிவேற்ற குறைபாட்டால், கொளத்துார் துவக்கப்பள்ளிகளில் பணிபுரியும், 38 ஆசிரியர்கள், தீபாவளி முன்பணம் பெற முடியாமல் தவிக்கின்றனர்.சேலம் மாவட்டம், கொளத்துார் ஒன்றியத்தில் அரசு, அதன் நிதி பெறும் துவக்கப்பள்ளிகள், 74 உள்ளன. 220 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பொங்கல் அல்லது தீபாவளி முன்பணம், 20,000 ரூபாய் வழங்கப்படுகிறது.கடந்த பொங்கலில் கொளத்துார் ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் பலரும் முன்பணம் கேட்டு, அரசு கருவூலத்துக்கு விண்ணப்பம் கொடுத்தனர். 38 ஆசிரியர்களை தவிர, மற்றவர்களுக்கு வழங்கப்பட்டது.இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின், கொளத்துார் வட்டார செயலர் செல்வராஜ் கூறியதாவது:பொங்கலுக்கு, முன்பணத்துக்கு விண்ணப்பித்து கிடைக்காத, 38 ஆசிரியர் உள்பட, 100 ஆசிரியர்கள், தீபாவளி முன் பணம் கேட்டு மேட்டூர் அரசு கருவூலத்தில் விண்ணப்பித்தனர்.அதில் ஏற்கனவே, பொங்கலுக்கு விண்ணப்பித்து கிடைக்காத, 38 ஆசிரியர்கள், முன்பணம் பெற்றதாக, கணினி பதிவேற்றத்தில் காட்டுகிறது. அந்த ஆசிரியர்களுக்கு, தீபாவளிக்கும் முன்பணம் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. கணினியில், ஏற்கனவே பதிவேற்றத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கி, அதை சரி செய்யக்கோரி, மேட்டூர் உதவி கருவூல அலுவலர் கவிதாவிடம் மனு கொடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி