உள்ளூர் செய்திகள்

4 பாருக்கு சீல்

பனமரத்துப்பட்டி,: சேலம் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள், சேலம், ஆத்துார் மதுவிலக்கு போலீசாருடன் இணைந்து சட்டவிரோத பார் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ஆத்துார் அருகே காட்டுக்கோட்டை, நரசிங்கபுரம், ஏத்தாப்பூர், வாழப்பாடி ஆகிய இடங்களில் சட்டவிரோதமாக செயல்பட்ட, 4 பாரையும், அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மது விலக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், 'ஏத்தாப்பூர், நரசிங்கபுரம் டாஸ்மாக் கடையில் பார் ஏலம் எடுத்தவர்கள், பணம் கட்டாததால் உரிமம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் தொடர்ந்து சட்டவிரோதமாக பார் நடத்தியதால் சீல் வைக்கப்பட்டது. மற்ற 2 இடங்களில் டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி பார் நடத்தியதால் சீல் வைக்கப்பட்டது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை