தொழிலாளி வீட்டில் 4 பவுன் திருட்டு
தொழிலாளி வீட்டில் 4 பவுன் திருட்டு சங்ககிரி, டிச. 13-சங்ககிரி, வி.என்.பாளையத்தை சேர்ந்த சலவைத்தொழிலாளி கோவிந்தராஜ், 65. இவரும், மகளும் நேற்று துணிகளை துவைக்க, இடைப்பாடி அரசு கல்லுாரி அருகே உள்ள குட்டைக்கு நேற்று முன்தினம் சென்றுவிட்டு, மாலை, 4:00 மணிக்கு வீடு திரும்பினர். அப்போது பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பார்த்தபோது, 4 பவுன் நகைகள் திருடுபோனது தெரிந்தது. கோவிந்தராஜ் நேற்று அளித்த புகார்படி, சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.