உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 40 சவரன் ரூ.3 லட்சம் கொள்ளை

40 சவரன் ரூ.3 லட்சம் கொள்ளை

தாரமங்கலம்:சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே சிக்கம்பட்டி, சீராய்கடை பாலிக்காட்டை சேர்ந்தவர் ராஜி, 48. பனைமரம் ஏறும் தொழிலாளி. இவர், வெளியூரில் பணி செய்து வருகிறார். நேற்று காலை, இவரது மகன் பள்ளிக்கும், மகள் கல்லுாரிக்கும் சென்றனர். மனைவி கவிதா வீட்டை பூட்டி ஈரோடு சென்றார். மதியம், வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 40 சவரன் நகைகள், 3 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரிந்தது. தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி