மேலும் செய்திகள்
மின் அலுவலகம் இடமாற்றம்
23-Aug-2025
மேட்டூர், மேட்டூர் நகராட்சி அலுவலகம் அருகே, ஒரே நாய் விரட்டி விரட்டி கடித்து பெண் உள்பட, 5 பேர் காயம் அடைந்தனர்.மேட்டூர் நகராட்சி அலுவலகம் அருகே, பொதுப்பணித்துறை குடியிருப்பு வீதியில் நேற்று காலை 7:30 மணியளவில் நடந்து சென்ற எல்.ஜி.எம்., குடியிருப்பு சத்யா, 36, கூலி லைன் ரஞ்சித்குமார், 41, தினசரி சந்தை ராஜேந்திரன், 71, இந்திராநகர் மணி, 30, மரக்கோட்டை மாதேசன், 60, என, 5 பேரை அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒரே நாய் விரட்டி சென்று கடித்துள்ளது. காயமடைந்த அனைவருக்கும், மேட்டூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், வெறிநாய் கடி பாதிப்பு தடுப்பு (ரேபிஸ்) மருந்து ஊசி செலுத்தப்பட்டது.
23-Aug-2025