மேலும் செய்திகள்
'போக்சோ'வில் கைதானவர் மீது 'குண்டாஸ்'
10-Dec-2024
சேலம் : குண்டர் சட்டத்தில் நேற்று, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த நவ., 8ல், அயோத்தியாப்பட்டணம் பகுதியில், காரில் சென்று கொண்டிருந்த சுக்கம்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரை, வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில், அருண்குமார் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வேறு வழக்கு-களில், ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த, அழகாபுரம் பெரிய புதுார் பகுதியை சேர்ந்த அருண்குமார், 22, கந்-தசாமி, 34, கார்த்திக், 33, மதியழகன், 33 ஆகியோரை குண்டர் சட்-டத்தில் நேற்று போலீசார் கைது செய்தனர். இதே போல், தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, ஈரோடு, சிக்கரசம்பா-ளையம் ரஞ்சித், 29, என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்-பட்டார்.
10-Dec-2024