உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆத்துார் வங்கதேச முகாமில் மேலும் 50 பேர் அடைப்பு

ஆத்துார் வங்கதேச முகாமில் மேலும் 50 பேர் அடைப்பு

ஆத்துார்: ஆத்துார் வங்கதேச முகாமில் மேலும், 50 பேர் அடைக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். சேலம் மாவட்டம், ஆத்துார் தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த மாவட்ட சிறை, வங்கதேசத்தினர் முகாமாக மாற்றப்பட்டுள்ளது. ஜூலை, 30 முதல், வங்கதேசத்தினர் அங்கு அடைக்கப்படுவதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு ஏற்கனவே, 31 பேர் அடைக்கப்பட்டனர். நேற்று முன்தினம், 25 பேர், நேற்று, 25 பேர் என மொத்தம், 50 பேர் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து, ஆத்துார் வங்கதேச முகாமிற்கு மாற்றப்பட்டனர். முகாமில் தற்போது, 52 ஆண்கள், 20 பெண்கள், ஒன்பது குழந்தைகள் உட்பட, 81 பேர் உள்ளனர். இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என, சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமின், சிறை காலம் முடிந்து வெளியே வந்தவர்கள், ஆத்துார் வங்கதேச சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசார், 41 பேர், ஆயுதப்படை மற்றும் மகளிர் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இங்கு, 100 பேரை தங்க வைக்க முடியும். இவர்களுக்கு முறையாக ஆவணம் பெற்று, சில மாதங்களில் அவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கவும், மத்திய, மாநில அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய்த்துறையினர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை