மேலும் செய்திகள்
விரிவுரையாளர் மொபட்டில் ரூ.2.57 லட்சம் திருட்டு
13-Jan-2025
ஆத்துார் : அரசு கல்லுாரி முதல்வர் வீட்டில் 51 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, வடசென்னிமலை, எம்.பி., நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 54; ஆத்துார் அரசு கல்லுாரி முதல்வர். இவரது மனைவி சித்ரா, அதே கல்லுாரி கவுரவ விரிவுரையாளர். கடந்த, 23ல், செல்வராஜின் மாமனார் ராமசாமி இறந்ததால், வீட்டை பூட்டி பெரியேரிக்கு சென்றனர்.நேற்று மதியம் திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டில் 51 சவரன் நகைகள், 1 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்த போது, அதிகாலை, 2:00 மணிக்கு, முகமூடி அணிந்த இருவர் வீட்டிற்குள் சென்று கொள்ளையடித்தது தெரியவந்தது.
13-Jan-2025