உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயிலில் கிடந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கிடந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் :அசாம் மாநிலம் திப்ருகர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று காலை, 10:30 மணிக்கு பொம்மிடி - சேலம் ரயில் பாதை இடையே வந்து கொண்டிருந்தது. அதில் ரயில்வே போலீசார் மேற்கொண்ட சோதனையில், பின்பகுதியில் இருந்து, 3வது பொதுப்பிரிவு பெட்டியில் கிடந்த ஒரு பையில், 6 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சேலம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, கொண்டு வந்தவர் யார் என, விசாரணை நடக்கிறது.3 பேர் கைதுசேலம் டவுன் போலீசார், ஆர்.எஸ்., சாலையில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, அன்னதானப்பட்டி, சரவணபவன் தெருவை சேர்ந்த சரண், 21, என்பவர் சிக்கினார். அவரிடமிருந்து, 1.600 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு, 32,000 ரூபாய். பின் சரணை, போலீசார் கைது செய்தனர். அதேபோல் செவ்வாய்ப்பேட்டை போலீசார், அங்குள்ள கபிலர் தெருவில் கஞ்சா விற்ற, மூணாங்கரட்டை சேர்ந்த கீர்த்திவாசன், 21, பொம்மண்ண செட்டிக்காடு யுவராஜ், 28, ஆகியோரை கைது செய்து, 1.150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை