ஆத்தூர் வசிஷ்ட நதியில் 6,129 கன அடி நீர் திறப்பு
ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கரியக்கோவில் அணையில் இருந்து 1,896 கன அடி தண்ணீரும் மற்றும் வாழப்பாடி ஆனைமடுவு அணையிலிருந்து 4,633 கன அடி உபரி நீரும் என மொத்தம் 6,129 கன அடி தண்ணீரும் வசிஷ்ட நதியில் திறந்து விடப்பட்டுள்ளது.இது தவிர கல்வராயன் மலை நீரோடையிலிருந்து 500 கன அடிக்கு மேல் தண்ணீர் வருகிறது. வசிஷ்ட நதியில் வரலாறு காணாத வகையில் தண்ணீர் அதிகரித்து ஆர்ப்பரித்து செல்வதால், பாலம், தரைப்பாலம், அமைந்துள்ள இடங்களில் பொதுமக்கள் கடந்து செல்லாத வகையில் பாதுகாப்பு பணியில் போலீசார், வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.