உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெருமாள் கோவிலில் 61ம் ஆண்டு திருப்பவித்ர உற்சவம் தொடக்கம்

பெருமாள் கோவிலில் 61ம் ஆண்டு திருப்பவித்ர உற்சவம் தொடக்கம்

சேலம், சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில், ஐப்பசி மாதத்தில் திருப்பவித்ர உற்சவம் நடத்தப்படுகிறது. அதன்படி, 61ம் ஆண்டாக, நேற்று காலை, 10:30 மணிக்கு, பெருமாளுக்கு சர்வத்ர திருமஞ்சனம் செய்யப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு மேல் அங்குரார்பணத்துடன் பவித்ர உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து பவித்ராதி வாஸங்கள், யாக பூஜை நடத்தப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு முதல் நாள் யாகம், பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்றது. இன்று பல்வேறு சிறப்பு யாகங்கள் செய்து, அதில் வைத்து பூஜித்த பவித்ர மாலைகள், அனைத்து பரிவார மூர்த்திகளுக்கு சார்த்தி பூஜை செய்யப்படுகிறது. நாளை சுப்ரபாத சேவை, அனைத்து வித யாகங்கள், மகா பூர்ணாஹூதியுடன் நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ