உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தேனீ கொட்டி 7 பேர் காயம்

தேனீ கொட்டி 7 பேர் காயம்

தலைவாசல், தலைவாசல், சாத்தப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் வேப்ப மரம் உள்ளது. அதில் விஷத்தன்மை கொண்ட கதண்டு தேனீ கூடு கட்டியிருந்தது. நேற்று மாலை, 5:00 மணிக்கு, கூட்டில் இருந்து வெளியேறிய தேனீக்கள், அந்த வழியே சென்றவர்களை கொட்டின. அதில் முருகேசன் 52, சிவசக்திவேல் 37, சீனிவாசன் 60, அனேகன், 5, ஆர்த்மிகா, 7, உள்பட, 7 பேருக்கு, கண், கை, கால் முழுதும் வீக்கம், காயம் ஏற்பட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும் வேப்ப மரத்தில் உள்ள கதண்டு கூட்டை அழிக்க, மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை