மேலும் செய்திகள்
வெறிநாய்கள் கடித்து 50 ஆடுகள் பலி
29-Jun-2025
கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே தெடாவூர் டவுன் பஞ்சாயத்து, தெற்கு மணக்காட்டை சேர்ந்த சுப்ரமணி மனைவி சின்னப்பொண்ணு, 70. இவரது நிலத்தில் விவசாயத்துடன், கால்நடைகளையும் வளர்க்கிறார். நேற்று முன்தினம் இரவு, பட்டியில் ஆடு, மாடுகளை கட்டி வைத்திருந்தார். நேற்று காலை பார்த்தபோது, 7 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தன.அவர் தகவல்படி, வனத்துறையினர், கெங்கவல்லி போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து கால்நடைத்துறையினர், இறந்த ஆடுகளை உடற்கூராய்வு செய்தனர். மலை அடிவார பகுதி என்பதால், வனவிலங்குகள் கடித்துக்கொன்றதா, தெரு நாய்கள் கடித்துக்கொன்றதா என, விசாரணை நடக்கிறது.
29-Jun-2025