7.5 பவுன் நகை திருட்டு
சேலம், சேலம், கோரிமேடு அருகே ரத்தினபுரியை சேர்ந்தவர் நியமத்துல்லா, 29. இவர் குடும்பத்தினருடன், பெரம்பலுாரில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்துக்கு செல்ல, நேற்று மதியம், 3:00 மணிக்கு, சேலம் புது பஸ் ஸ்டாண்ட் வந்து, கும்பகோணம் செல்லும் பஸ்சில் ஏறி, அவரது பையை வைத்திருந்தார். சிறிது நேரத்தில் பையை காணவில்லை. அதில், 7.5 பவுன் தங்க நகையை வைத்திருந்ததால் அதிர்ச்சியடைந்த நியமத்துல்லா, பஸ் முழுதும் தேடியும் கிடைக்கவில்லை. பின் அவர் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.