உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 9 இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

9 இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

சேலம், சேலம் சரகத்தில், 9 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி கிருஷ்ணகிரி டி.சி.ஆர்.பி., கிரிஜாராணி, சேலம் மாவட்டம் ஆத்துார் மகளிர் ஸ்டேஷனுக்கும், அங்கிருந்த மலர்கொடி, தர்மபுரி மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், ஆத்துார் ஊரகம் பூர்ணிமா, தலைவாசல் ஸ்டேஷனுக்கும், அங்கிருந்த கந்தவேல், ஏற்காடு ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டனர்.ஏற்காடு வாசுகி, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை மகளிர் ஸ்டேஷனுக்கும், அங்கிருந்த புவனேஸ்வரி, நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஸ்டேஷனுக்கும், அங்கிருந்த கோமதி, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மகளிர் ஸ்டேஷனுக்கும், அங்கிருந்த இளவரசி, கிருஷ்ணகிரி பாரூர் ஸ்டேஷனுக்கும், அங்கிருந்த சிவசங்கரன், காரிமங்கலம் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவை சேலம் டி.ஐ.ஜி., அனில்குமார் கிரி(பொ) பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ