உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த லஞ்சம் வாங்கிய தாசில்தார் வீடு, ஆபீசில் 9 மணி நேரம் சோதனை

ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த லஞ்சம் வாங்கிய தாசில்தார் வீடு, ஆபீசில் 9 மணி நேரம் சோதனை

கெங்கவல்லி: நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து, ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த லஞ்சம் வாங்கிய கெங்கவல்லி தாசில்தார் கைது செய்யப்பட்டு, அவரது அலுவலகம், வீட்டில், 9 மணி நேரம் தொடர் சோதனை நடந்தது.நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, 2003ல், அனைத்து கலெக்-டர்களுக்கும், வருவாய்த்துறை உத்தரவிட்டிருந்தது. அதேபோல், 2005ல், சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், 'நீர்நிலை ஆக்கி-ரமிப்புகளை அகற்றி மீட்க வேண்டும்' என, அரசுக்கு உத்தரவிட்-டது. இதனால், 2007ல், தமிழக அரசு, 'குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் சட்டம்' கொண்டு வந்தது. நீர் தேக்க எல்லை எது என்பதை, வருவாய்த்துறை ஆவணங்-களை வைத்து, 'சர்வே' அதிகாரி நிர்ணயிப்பார். இப்பணி முடிந்-ததும், வரைபடம், பதிவேடு தயாரித்து, பொதுப்பணித்துறை-யிடம் ஒப்படைக்க வேண்டும். ஆக்கிரமிப்பை, ஆக்கிரமிப்பா-ளரே அகற்றவில்லை என்றால், அதிகாரிகள் அகற்ற வேண்டும்; அதற்கு போலீஸ் உதவியை பெறலாம். ஆக்கிரமிப்பாளர்களுக்கு, 3 மாத சிறை அல்லது 5,000 ரூபாய் அபராதம் அல்லது சிறை, அபராதம் என, தண்டனை விதிக்க, சட்டத்தில் வகை செய்யப்-பட்டுள்ளது.ஆனாலும், அந்த உத்தரவை அமல்படுத்த தாமதம் செய்வது, 'கவனிப்பு' பெறுவது தொடர்ந்து வருகிறது. அதை உறுதிப்படுத்-தும்படி, சேலம் மாவட்டம், தம்மம்பட்டியைச் சேர்ந்த மஞ்சுளா, விவசாய நிலம் வழியே செல்லும் நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற, வருவாய், பொதுப்பணித்துறையினரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசா-ரித்த நீதிமன்றம், 2024, செப்., 18ல், ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற, சேலம் கலெக்டர், கெங்கவல்லி தாசில்தார், நீர்வளத்-துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்ப-டுத்த, கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன், 38, அலைக்க-ழிப்பு செய்ததோடு, 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.அத்துடன் தை அமாவாசையன்று முன் பணம் கொடுத்தால் மட்-டுமே, பிப்ரவரியில் அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு அகற்ற நடவ-டிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். இதனால் மஞ்சுளா, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் தெரிவித்தார். அதன்படி நேற்று முன்தினம், முன்பணம், 10,000 ரூபாயை மஞ்சுளாவிடம் பெற்றபோது, தாசில்தார் பாலகிருஷ்ணனை, போலீசார் கைது செய்தார். தொடர்ந்து அவரது அலுவலகம், தியாகனுாரில் உள்ள அவரது வீட்டில், மதியம், 3:00 மணி முதல், நள்ளிரவு, 12:30 மணி வரை சோதனை நடத்தினர். இதில் ஓடை ஆக்கிரமிப்பு தொடர்பான ஆவணங்களை, பறிமுதல் செய்தனர். பின் பாலகி-ருஷ்ணனை, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க, ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரியதர்-ஷினி, சேலம் கலெக்டர் பிருந்தாதேவிக்கு அறிக்கை வழங்கி-யுள்ளார்.இதனால் நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற உத்தரவு-களை, எந்த எதிர்பார்ப்புமின்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ