உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 9 மாத கர்ப்பிணி மாயம்

9 மாத கர்ப்பிணி மாயம்

தாரமங்கலம், தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி, அருந்ததியர் காலனியை சேர்ந்த கட்டட தொழிலாளி கார்த்திக், 33. இவர், 6 ஆண்டுக்கு முன், சேலம், திருவாக்கவுண்டனுாரை சேர்ந்த தமிழ்செல்வியை திருமணம் செய்தார். தற்போது, 9 மாத கர்ப்பிணியாக இருந்த தமிழ்செல்வி, கடந்த செப்., 24ல், சேலம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு செல்வதாக கூறி சென்றார். பின் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவரை காணாததால், கார்த்திக், நேற்று அளித்த புகார்படி, தாரமங்கலம் போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !