ஏரியில் மண் கடத்திய பொக்லைன் பறிமுதல்
தலைவாசல், புத்துார் ஏரியில் மண் கடத்திய, பொக்லைன் வாகனத்தை பொதுப்பணித்துறையினர் பறிமுதல் செய்து, போலீசில் ஒப்படைத்தனர்.தலைவாசல் அருகே, புத்துார் கிராமத்தில், 50 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறை ஏரி உள்ளது. இந்த ஏரியில் அனுமதியின்றி சிலர் மண் கடத்தலில் ஈடுபடுவதாக, சேலம் கலெக்டர் பிருந்தாதேவிக்கு புகார் தெரிவித்தனர். அவரது உத்தரவுபடி, ஆத்துார் கோட்ட பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தேன்மொழி தலைமையிலான அலுவலர்கள், நேற்று மாலை, 5:00 மணியளவில் ஆய்வு செய்தனர்.அப்போது, மண் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்து, தலைவாசல் போலீசில் ஒப்படைத்தனர்.