மேலும் செய்திகள்
காய்கறி வியாபாரி வீட்டில் ரூ.18 லட்சம் திருட்டு
24-Sep-2024
வக்கீலை வெட்டிய ரவுடி மீது வழக்குசேலம், அக்.1-சேலம் கன்னங்குறிச்சியில், வக்கீலை வெட்டிய ரவுடியை, போலீசார் தேடி வருகின்றனர்.சேலம், சின்னதிருப்பதி குருக்கள் தெருவை சேர்ந்தவர் ஆஷித்கான், 29. இவர் சேலம் நீதிமன்றத்தில் வக்கீலாக உள்ளார். இவரது மனைவி பத்மபிரியா, 27. இருவரும் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த போது, செவ்வாய்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி பாலாஜி, 24, அங்கு வந்துள்ளார்.இவர் மீது, தர்மபுரி இரட்டை கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியில் வந்துள்ளார். ஜாமின் எடுத்தது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாலாஜி, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, வக்கீல் ஆஷித்கான் கழுத்தில் வெட்டியுள்ளார். தடுக்க வந்த மனைவி பத்மபிரியாவுக்கும் கையில் வெட்டு விழுந்தது. சப்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, ரவுடி பாலாஜி, தனது டூவீலரில் தப்பி சென்றார். இருவரும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பாலாஜியை தேடி வருகின்றனர்.
24-Sep-2024