உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அடித்துச்சென்ற தரைப்பாலம் போக்குவரத்து துண்டிப்பு

அடித்துச்சென்ற தரைப்பாலம் போக்குவரத்து துண்டிப்பு

அயோத்தியாப்பட்டணம், டிச. 4-சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம், கோராத்துப்பட்டியில் சத்யா காலனி உள்ளது. அங்கு நேற்று முன்தினம் பெய்த கனமழையில், அப்பகுதியில் உள்ள திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த தரைப்பாலமும் அடித்துச்செல்லப்பட்டது.இதனால் பிரதான சாலை துண்டிக்கப்பட்டு கோராத்துப்பட்டி, வீராணம், டி.பெருமாபாளையம், வலசையூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த மக்கள், சேலம், 5 ரோடு, ஜங்ஷன் செல்ல முடியாமல் நீண்ட துாரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் தரைப்பாலத்தை மீண்டும் அமைத்துக்கொடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை