இளம் பெண்ணிடம் தானமாக பெறப்பட்ட சிறுநீரகம் வேறொருவருக்கு பொருத்தம்
சேலம்: விபத்தில் மூளைச்சாவு அடைந்த, இளம் பெண் மூலம் தான-மாக பெறப்பட்ட சிறுநீரகம், சேலம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து, வேறு ஒருவருக்கு பொருத்தப்பட்டது.அரியலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன், 50, இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகள் மஞ்சு, 21, ஈரோட்டில் உள்ள தனது சகோதரி வீட்டில் இருந்தபடி, போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தார். கடந்த, 23ம் தேதி சாலை விபத்தில் படுகாயம-டைந்த மஞ்சுவை, பெருந்துறை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்து-வமனையில் அனுமதித்தனர்.அங்கு அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக, டாக்டர்கள் தெரிவித்ததை தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முன்வந்தனர். இவரது உடலில் இருந்து எடுக்-கப்பட்ட ஒரு சிறுநீரகம் கடந்த, 26ல் சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து வரப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக, அனுமதிக்கப்பட்டிருந்த நோயா-ளிக்கு பொருத்தப்பட்டது.விபத்தில் மூளைச்சாவு அடைந்தும், மஞ்சுவின் உடல் உறுப்-புகள் தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.