உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போதையில் கிணற்றில் குளித்த தொழிலாளி பலி

போதையில் கிணற்றில் குளித்த தொழிலாளி பலி

ஓமலுார்: ஜலகண்டாபுரம், வண்டிமேடு கிழக்கு ஆலமர தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார், 28. இவர் ஜலகண்டாபுரம் பஸ் ஸ்டாண்டில் பூக்கடை நடத்தி வந்தார். நேற்று மாலை, 5:00 மணிக்கு, நண்பர்களுடன் பொடையன்தெரு மாரியம்மன் கோவில் கிணறு அருகே மது அருந்தினார். தொடர்ந்து ராஜ்குமார் கிணற்றில் குளித்து விளையாடினார். அப்போது மூழ்கிவிட்டார். நங்கவள்ளி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ராஜ்குமாரை சடலமாக மீட்டனர். ஜலகண்டாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி