திரளான பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு
இடைப்பாடி: இடைப்பாடி அருகே ஒட்டப்பட்டி ஆனந்தாயி அங்காள பரமேஸ்வரி ஆனந்த கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில், மாசி உற்சவ விழா, கடந்த, 10ல் தொடங்கியது. நேற்று அதிகாலை தீ மிதி விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மயான கொள்ளை, ஆனந்தாயி அங்காளம்மன் திருவீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.மாரியம்மன் கோவில்தேவூர் அருகே சென்றாயனுாரில் உள்ள கொங்கனுார் மாரியம்மன் கோவில் மாசி பொங்கல் விழா, கடந்த, 15ல் தொடங்கியது. நேற்று பக்தர்கள் நேர்த்திக்கடனுக்கு அலகு குத்தினர். உற்சவமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்த பின், பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி, கொட்டாயூர், நல்லங்கியூர், வட்ராம்பாளையம் வழியே கோவிலை அடைந்தனர். இதனையடுத்து சுவாமிக்கு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து, நேர்த்திக் கடனுக்கு ஆடுகள், கோழிகளை பலியிட்டு சுவாமியை வழிபட்டனர்.