உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பாலமலை அடிவாரத்தில் ஜோடி சிறுத்தைகள் உலா?

பாலமலை அடிவாரத்தில் ஜோடி சிறுத்தைகள் உலா?

மேட்டூர்: பாலமலை அடிவாரத்தில் ஜோடியாக சிறுத்தைகள் உலா வருவதாக, அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.சேலம் மாவட்டம் கொளத்துார், சாம்பள்ளி ஊராட்சி பாலமலை அடிவாரத்தில் கோம்பைக்காடு கிராமம் உள்ளது. அங்கு பெரும்பாலோர், விவசாய தொழில், ஆடு, மாடு மேய்க்கும் தொழிலை நம்பியுள்ளனர். ஒரு மாதத்துக்கு முன் அங்கு மர்ம விலங்கு ஆடுகளை கொன்று துாக்கிச்சென்றது. அது சிறுத்தை என கிராமத்தினர் தெரிவித்தனர். இதனால் வனத்துறையினர், அப்பகுதியில் ஒரு கூண்டு, 4 கேமரா வைத்தும் மர்ம விலங்கு சிக்கவில்லை. ஒரு வாரத்துக்கு முன், கோம்பைக்காட்டை சேர்ந்த ஜோதியின் இரு கோழிகள், கடந்த, 6ல் விவசாயி குமார் காட்டில் ஒரு நாயை, மர்ம விலங்கு துாக்கிச்சென்றது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரு சிறுத்தைகள் ஜோடியாக கிராமத்தில் சென்றதாக, அப்பகுதி விவசாயிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். மேலும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ