சரக்கு ரயில் மீது ஏறியவர் மின்சாரம் பாய்ந்து படுகாயம்
சரக்கு ரயில் மீது ஏறியவர்மின்சாரம் பாய்ந்து படுகாயம்சேலம், செப். 29-சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று முன்தினம் மாலை சரக்கு ரயில், 7வது நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த ஜாகீர் அம்மாபாளையம், வீரபாண்டியார் நகரை சேர்ந்த மோகன், 26, ரயில் மீது ஏறினார். அப்போது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து உடல் கருகிய நிலையில் துாக்கி வீசப்பட்டார். ரயில்வே போலீசார், அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.