மேலும் செய்திகள்
சாக்கு மூட்டை கிடங்கில் தீ விபத்து
10-Apr-2025
ஆத்துார்:ஆத்துார், புதுப்பேட்டையை சேர்ந்தவர் செல்வபதி, 35. தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது வீடு முன் நேற்று காலை, 7:00 மணிக்கு, உயர் அழுத்த மின் கம்பத்தில் இருந்த கம்பி அறுந்து, வெளியே நிறுத்தியிருந்த, 'ேஹாண்டா' பைக் மீது விழுந்தது. இதில் பைக்கின் முன்புற டயரில் தீப்பற்றி எரிந்தது. அருகே இருந்த சாக்கு பைகள், காய்ந்த நிலையில் இருந்த புற்களும் எரிந்தன. ஆத்துார் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து, மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. பின் மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். மின்வாரிய பணியாளர்கள், கம்பி சீரமைக்கும் பணியை மேற்கெண்டனர். 3 மணி நேரத்துக்கு பின், மின் வினியோகம் வழங்கப்பட்டது.
10-Apr-2025