உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பிளேடால் கையை கிழித்துக்கொண்ட கைதி

பிளேடால் கையை கிழித்துக்கொண்ட கைதி

சேலம் : சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதி அய்யன்துறை, 29. பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தனின் கூட்டாளியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, போக்சோ வழக்குகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட இவருக்கு நேற்று முன்தினம் பல் வலி ஏற்பட்டது. சிறை அதிகாரிகள், சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல அறிவுறுத்தினர்.ஆனால் போலீசார் வரவில்லை. இந்நிலையில் சிறையில் சோதனை குழுவை சேர்ந்த வார்டன், அய்யன்துறையிடம் பேசியுள்ளார். அதில் கோபம் அடைந்த அய்யன்துறை, பிளேடால் கையை கிழித்துக்கொண்டார்.ரத்தம் கொட்டிய நிலையில், வார்டன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். அதிகாரிகள் விசாரித்து கைதியை சமாதானப்படுத்தினர். பின் சிறை மருத்துவமனைக்கு அவரை அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தனர். இதையடுத்து வார்டன், வேறு பணிக்கு மாற்றப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை