உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாலிபருக்கு அரிவாள் வெட்டு நால்வர் கும்பலுக்கு வலை

வாலிபருக்கு அரிவாள் வெட்டு நால்வர் கும்பலுக்கு வலை

சேலம், நவ. 2-சேலம் கிச்சிப்பாளையம், குறிஞ்சி நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த சரவணன் மகன் சூர்யா, 28. இவர் கடந்த, 31 இரவு, 8:30 மணியளவில் குடிபோதையில் வீட்டுக்கு முன்பாக பட்டாசு வெடித்து கொண்டிருந்தார்.அப்போது அங்கு போதையில் வந்த, பக்கத்து வீட்டை சேர்ந்த பிரேம்குமார், சாரதி, குமார், ஜீவன் ஆகியோர், சூர்யாவிடம், உன் தம்பி தாமரைச்செல்வன் எங்கே என கேட்டு, தகாதவார்த்தைகளால் பேசி தகராறு செய்துள்ளனர்.மேலும் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து, சூர்யாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில் அவர், ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.சத்தம் கேட்டு வந்த தாமரைச்செல்வன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன், அண்ணனை மீட்டு, ஆட்டோவில் அழைத்து வந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக, கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குபதிந்து, வெட்டிய நால்வர் கும்பலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை