பட்டப்பகலில் சிறை எதிரே கள்ளக்காதலனுக்கு கத்திக்குத்து
சேலம்:பட்டப்பகலில் மத்திய சிறை எதிரே, கள்ளக்காதலனை கத்தியால் குத்தியது தொடர்பாக, கள்ளக்காதலி, அவரது கணவர் உள்பட, 3 பேரை, போலீசார் தேடுகின்றனர்.சேலம், சின்னகொல்லப்பட்டி, காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார், 25. இவர், கோரிமேட்டில் கல்குவாரி நடத்தும் சிவா வீட்டில், கார் டிரைவராக உள்ளார். அதே வீட்டில் சவுந்தர்யா என்பவர், சமையல் வேலை செய்தார். இதில் சசிகுமார், சவுந்தர்யா இடையே பழக்கம் ஏற்பட்டு தவறான உறவாக மாறியது. சவுந்தர்யாவின் கணவர் சபரி, இருவரையும் கண்டித்தார். பின் சவுந்தர்யா, வேலையில் இருந்து நின்றுவிட்டார். ஆனால் சவுந்தர்யாவுடன், சசிகுமார் பேசி வந்தார். மேலும் இருவரும் பழகிய வீடியோவை, சவுந்தர்யாவுக்கு அனுப்பினார்.இதனால் கடந்த, 6 இரவு, கலெக்டர் பங்களா அருகே வரும்படி சசிகுமாரை, சபரி, சவுந்தர்யா அழைத்தனர். அங்கு அவர் வந்ததும், 'மனைவியுடன் பழகுவதை நிறுத்திவிட வேண்டும்' என சபரி தெரிவித்தார்.அதில் தகராறு ஏற்பட்டது. சசிகுமார் மொபைல் போனை பறித்துக்கொண்டு, சபரியும், சவுந்தர்யாவும் சென்றனர்.பின் சவுந்தர்யா போன் செய்து, சசிகுமாரை, சேலம் மத்திய சிறை எதிரே வரும்படி அழைத்தார்.அதன்படி நேற்று காலை, 9:30 மணிக்கு சிறை எதிரே உள்ள, திருநகர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே, சசிகுமார் வந்தார். அங்கு சபரி, சவுந்தர்யா உள்பட, 3 பேர் இருந்தனர்.சவுந்தர்யா, 'இனி பழக வேண்டாம்' என, சசிகுமாரிடம் தெரிவித்தார். அப்போது சபரி, கத்தியால் சசிகுமாரின் வயிறு, கை, கழுத்து உள்பட, 7 இடங்களில் சரமாரியாக குத்தினார். அவர் சரிந்து நிலைகுலைய, 3 பேரும் தப்பினர். மக்கள், அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அஸ்தம்பட்டி போலீசார், 3 பேரையும் தேடுகின்றனர்.