உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தலைமறைவாக இருந்த வடமாநிலபெண் கைது

தலைமறைவாக இருந்த வடமாநிலபெண் கைது

பள்ளிப்பாளையம்:ஜார்க்கண்ட் மாநிலம், சக்கரதாப்பூர் பகுதியை சேர்ந்தவர் துகிபோட்ரா, 21; இவர், ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி, பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை பகுதியில் உள்ள தனியார் நுாற்பாலையில் வேலை செய்து வந்தார்.இதுகுறித்து, விசாரணை நடத்தி வந்த ஜார்க்கண்ட் போலீசாருக்கு, துகிபோட்ரா, வெப்படையில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்த, நேற்று வெப்படை வந்த ஜார்க்கண்ட் போலீசார், வெப்படை போலீசார் உதவியுடன், தனியார் நுாற்பாலைக்கு சென்று அங்கு தங்கியிருந்த துகிபோட்ராவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி