உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆட்டையாம்பட்டி ஞானந்தகிரி சுவாமிகள் ஆராதனை விழா

ஆட்டையாம்பட்டி ஞானந்தகிரி சுவாமிகள் ஆராதனை விழா

வீரபாண்டி, ஜன. 1-ஞானந்தகிரி சுவாமிகளால், 1942ல், சேலம் ஆட்டையாம்பட்டியில் ஆஸ்ரமம் துவக்கப்பட்டது. இதன் பின், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் தங்கி மடங்களை துவக்கி, 1974ல் தபோவனத்தில் சித்தியடைந்தார். நேற்று அவரது ஆராதனை விழாவையொட்டி, சென்னை பக்தர்கள் அவரது படத்தை மலர்களால் அலங்கரித்து, சப்பரத்தில் வைத்து பஜனை பாடல்களை பாடியபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர்.மதியம் அவரது திருவுருவ சிலைக்கு அபி ேஷகம் செய்து, பல வண்ண மலர்களால் அலங்கரித்து ஆராதனை விழா நடத்தினர். இதில் உள்ளூர் பக்தர்களும் திரளாக பங்கேற்று, அவரது நாம சங்கீர்த்தனைகள், பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர். பின், அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை