புதர் மண்டிய மயானம் நடவடிக்கை அவசியம்
மேச்சேரி: மேச்சேரி, விருதாசம்பட்டி ஊராட்சி பழங்கோட்டையில், 2 ஏக்-கரில் மயானம் உள்ளது. அங்குள்ள சீமைக்கருவேல மரங்கள், புதர்களை, ஆண்டுதோறும் ஊராட்சி சார்பில் தொழிலாளர்கள் வெட்டி அகற்றுவர். நடப்பாண்டு அகற்றாததால் மயானம் புதர்மண்டியுள்ளது. இதனால் இறந்தவர்கள் உடலை கொண்டு வரும் மக்களே, தேவைக்கேற்ப அகற்றி சுத்தம் செய்து, அடக்கம் செய்யும் நிலை உள்ளது. அதனால் மயானத்தை சுத்தப்படுத்த, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.