உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வலுவிழந்த சுரங்கப்பால சுவர் சீரமைக்க நடவடிக்கை தேவை

வலுவிழந்த சுரங்கப்பால சுவர் சீரமைக்க நடவடிக்கை தேவை

சேலம்: சேலம், இளம்பிள்ளை பிரதான சாலையில், கந்தம்பட்டி ரயில்வே சுரங்கப்பாதை, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.ஆனால் எப்போது மழை பெய்தாலும், சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பது மட்டுமின்றி, அப்பகுதி முழுதும் ஊற்று நீர் பெருக்கெடுத்து ஓடுவதும் வாடிக்கையாகிவிட்டது. 50க்கும் மேற்பட்ட இடங்களில் சுவர்களை துளைத்துக்கொண்டு தண்ணீர் வெளியேறி வருவதால், சுவர்கள் முழுதும் வலுவிழந்து காணப்படுகிறது.சமீபத்தில் பெய்த கன மழையால் சுவரின் ஒரு இடத்தில் சேதம் அதிகமாகி உள்ளது. ஏற்கனவே ஆங்காங்கே விரிசல் விட்டு பெயர்ந்து காணப்படுகிறது. போக்குவரத்து நிறைந்த பாதை என்-பதால், ரயில்வே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சுற்றுச்சுவரின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி