மேலும் செய்திகள்
ரசிகர் மன்றத்தினரின் வித்தியாச முயற்சி
14-Jul-2025
ஆத்துார், சேலம் கிழக்கு மாவட்ட நடிகர் சூர்யா நற்பணி இயக்கம் சார்பில், நடிகர் சூர்யாவின், 50வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு ஆத்துார் வெள்ளை விநாயகர், ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவில்களில், மாவட்ட தலைவர் ரவி தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து ஆத்துார், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள ஆதரவேற்றோர், முதியோர் மற்றும் குழந்தைகள் மையம், சாலையோர ஆதரவற்றோருக்கு, பிரியாணியுடன், மீன் குழம்பு உணவு வழங்கினர். ஒட்டப்பட்டி ஏரியில், 50 பனை விதைகளை நடவு செய்தனர். பள்ளி மாணவ, மாணவியர், 60 பேருக்கு, பேனா, பென்சில், நோட்டு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
14-Jul-2025