உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போலீஸ் அதிகாரிகளிடம் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை

போலீஸ் அதிகாரிகளிடம் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை

சேலம்: தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், நேற்று சேலம் வந்தார். அவரை மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்-வரி, சேலம் டி.ஐ.ஜி., உமா உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.சி.சி., பயிற்சி முகாம் நடத்தி மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி போலீஸ் துறை அதிகாரிகளிடம், சில மாதங்களுக்கு முன் பள்ளியில் நடந்த தீ வைப்பு சம்பவம் தொடர்பாக கேட்டறிந்து உரிய ஆலோசனை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !