உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மண் வள அட்டை பெற விவசாயிகளுக்கு அறிவுரை

மண் வள அட்டை பெற விவசாயிகளுக்கு அறிவுரை

வீரபாண்டி: மண் வள அட்டை பெற விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து வீரபாண்டி வட்டார வேளாண் துறை உதவி இயக்குனர் கிரிஜா அறிக்கை:மண் வளத்தை பரிசோதித்து அதில் உள்ள சத்துகளின் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப உரங்களை பயன்படுத்த, 2015ல் மண் வள அட்டை அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது தமிழ் மண் வளம் என்ற இணையதளம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அனைத்து மண் வள அட்டைகளும் கணினி மயமாக்கப்பட்ட அட்டைகளாக வழங்கப்படுகின்றன.இதில் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் சொந்த அனுபவம், அறிவுத்திறன் மூலம் மண் வளத்தை கண்காணிக்க, மேம்படுத்தும் கருவியாக செயல்படுகிறது. பருவ காலங்களில் ஏற்படும் மண் வள மாற்றங்களை தெரிந்து அதற்கான மேலாண் நடவடிக்கைகள் எடுக்க முடியும். மண் வளத்தை பரிசோதனை செய்ய விரும்புவோர், சரியான முறையில் மண் மாதிரி எடுத்து அருகிலுள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் கொடுத்து, 20 ரூபாய் செலுத்தி மண் வளத்தை தெரிந்து கொள்ளலாம்.அந்த அட்டையில், அவரவர் பகுதி மண்ணில் உள்ள பேரூட்ட, நுண்ணுாட்ட, சுண்ணாம்பு சத்துகள், உப்பு, கார, அமில அளவுகள், அவற்றை சமன் செய்யும் வழிமுறை இருக்கும். இந்த மண்ணில் என்னென்ன சத்துகள் உள்ளன, எந்த பயிர்களை சாகுபடி செய்யலாம், எந்த மாதிரி உரத்தை, எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என தெரிந்து கொள்ள உதவும். அதனால் விவசாயிகள், மண் வள அட்டைகளை பெற்று பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை