அ.தி.மு.க., - ஐ.டி., அணி ஆலோசனை கூட்டம்
பனமரத்துப்பட்டி :அ.தி.மு.க.,வின், வீரபாண்டி மேற்கு ஒன்றியம், தகவல் தொழில்நுட்ப ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. ஒன்றிய செயலர் வருதராஜ் வரவேற்றார். சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்து, ஆலோசனை வழங்கினார். வீரபாண்டி தொகுதி, எம்.எல்.ஏ., ராஜமுத்து, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலர் ஜெயகாந்தன் பேசினர்.மாவட்ட இளைஞரணி செயலர் அருண்குமார், அம்மா பேரவை துணை செயலர் பெருமாள், ஆட்டையாம்பட்டி பேரூர் செயலர் மாதேஸ், கைத்தறி பிரிவு மாவட்ட செயலர் வினோத், நிர்வாகிகள் ரமேஷ், பாலாஜி, சவுந்தர், புத்துார் முருகன், பாலம்பட்டி செல்வகுமார், பிச்சம்பாளையம் முருகேசன், பூலாவரி கதிரவன், சென்னகிரி தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.