உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 3 மாதத்துக்கு ஒருமுறை நுகர்வோர் குறைதீர் கூட்டத்தை நடத்துவதில்லை என குற்றச்சாட்டு

3 மாதத்துக்கு ஒருமுறை நுகர்வோர் குறைதீர் கூட்டத்தை நடத்துவதில்லை என குற்றச்சாட்டு

மேட்டூர்: 'ஒவ்வொரு அரசு துறையும், 3 மாதங்களுக்கு ஒருமுறை நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். ஆனால் அப்படி நடத்தப்படுவதில்லை' என, நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் குற்-றம்சாட்டப்பட்டது.சேலம் மாவட்டம் மேட்டூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், நுகர்வோர் குறை தீர் கூட்டம் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., சுகுமார் தலைமை வகித்தார்.அதில் மேட்டூர் நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க செயலர் இதய-செல்வன் பேசியதாவது:சாலையோர ஆக்கிரமிப்புகளை, மேட்டூர் நகராட்சி நிர்வாகம் ஒரு மாதத்துக்கு முன் அகற்றியது. ஆனால் மீண்டும் வியாபாரிகள் ஆக்கிரமிக்க தொடங்கி விட்டனர். பாதாள சாக்கடை தொட்டி-களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வீதியில் ஓடுகி-றது. 4 ரோடு வளைவில் உள்ள ஸ்டாப்பில், பஸ்களை நிறுத்துவ-தில்லை. ேட்டூரில் உள்ள ஒவ்வொரு அரசு துறையும், 3 மாதங்க-ளுக்கு ஒருமுறை நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். ஆனால் அப்படி நடத்தப்படுவதில்லை.இவ்வாறு அவர் பேசினார்.செயற்குழு உறுப்பினர் ஜெயகுமார், ''பொன்னகர் கால்வாய் பாலம் குறுகலாக உள்ளதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. பாலத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்,''என்றார்.ஆர்.டி.ஓ., சுகுமார், ''துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்,'' என்றார்.நேர்முக உதவியாளர் புரு ேஷாத்தமன், தாசில்தார் ரமேஷ் உள்-பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ