உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி; 5 மணி நேரத்தில் மீண்டும் தடை

நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி; 5 மணி நேரத்தில் மீண்டும் தடை

ஆத்துார்: ஆத்துார் அருகே கல்லாநத்தம் ஊராட்சி முட்டல் கிராமம், கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ளது. அங்கு ஆணைவாரி நீர் வீழ்ச்சி, முட்டல் ஏரி, வனத்துறையின் சூழல் சுற்றுலா திட்டத்தில் செயல்படுகிறது.கடந்த, 4 முதல், கல்வராயன்மலையில் பெய்து வரும் கன மழையால், ஆணைவாரி நீர் வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. 8 முதல், அங்கு குளிக்க வனத்துறை தடை விதித்தது. 13ம் நாளான நேற்று காலை, 9:00 மணிக்கு ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் குளிக்க வனத்துறை அனுமதி வழங்குவதாக அறிவித்தது.ஆனால் மதியம், 12:00 மணிக்கு மேல், கல்வராயன்மலையில் தொடர் மழை பெய்தது. இதனால் மதியம், 2:00 மணிக்கு ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்கு மீண்டும் தடை விதிப்பதாக, வனத்துறையினர் அறிவித்தனர். அனுமதித்த, 5 மணி நேரத்தில், மீண்டும் தடையால், விடுமுறையில் குளிக்க வந்த சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை