உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆந்திரா தக்காளி வரத்தால் கிலோ ரூ.12 ஆக சரிவு

ஆந்திரா தக்காளி வரத்தால் கிலோ ரூ.12 ஆக சரிவு

தலைவாசல், சேலம் மாவட்டம் தலைவாசலில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, ஒரு வாரமாக ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை சரிந்துள்ளது.இதுகுறித்து தலைவாசல் மொத்த வியாபாரிகள் கூறியதாவது:மார்க்கெட்டில் கடந்த வாரம், 17 கிலோ பெட்டி தக்காளி, 350 ரூபாய்; 24 கிலோ பெட்டி தக்காளி, 500 ரூபாய்க்கு விற்றது. சில்லரை விற்பனையில் கிலோ, 18 முதல், 20 ரூபாயாக இருந்தது. ஒரு வாரமாக ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால், 17 கிலோ பெட்டி தக்காளி, 200 முதல், 250 ரூபாய்; 24 கிலோ பெட்டி, 400 ரூபாய் என, பெட்டிக்கு, 100 ரூபாய் வரை குறைந்துள்ளது. இதனால் சில்லரை விலையில் கிலோ, 12 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை