உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மரவள்ளி கிழங்கு விலைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

மரவள்ளி கிழங்கு விலைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

சேலம், சேலம் மாவட்ட மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் என, முத்தரப்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி முன்னிலை வகித்தார்.அதற்கு தலைமை வகித்து, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது: மரவள்ளி கிழங்கு விலை ஏற்ற இறக்கம் குறித்து, விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், பல்வேறு ஆலோசனை, கருத்துகளை கூறியுள்ளனர். இதுகுறித்து சேகோசர்வ், வேளாண், தோட்டக்கலை உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. அதன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.தொழில் கமிஷனர், தொழில் வணிக இயக்குனர் நிர்மல்ராஜ், தி.மு.க.,வின் சேலம் எம்.பி., செல்வகணபதி, ராஜ்யசபா எம்.பி., சிவலிங்கம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை