நவராத்திரி திருவிழா 3ம் நாளில் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம்
வீரபாண்டி: சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் கடந்த, 3 முதல், நவராத்திரி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. 3ம் நாளான நேற்று, பெரியநாயகி அம்மன் மூலவர், உற்சவர் இருவரும் சிவசக்தி சொரூபமாக, 'அர்த்தநாரீஸ்வரர்' அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதேபோல் அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள், பட்டைக்கோவில் வரதராஜர் கோவில்களில் சவுந்தரவல்லி, பெருந்தேவி தாயார்களின் உற்சவரை, அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருள செய்து, பிரபந்த கோஷ்டியார்கள் லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்து பூஜை செய்யப்படுகிறது.தாரமங்கலம் கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் மூன்றாம் நாளையொட்டி நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர்.காலையில் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் உற்சவர் அம்மனுக்கு யோக நரசிம்மர் அலங்காரம் செய்யப்பட்டது.ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.