இன்று திதி கொடுக்க ஏற்பாடு
சேலம் :இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு, சேலம் சுகவனேஸ்வரர் கோவில் நந்தவனத்தில், முன்னோர்களுக்கு, 'திதி', தர்ப்பணம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு: மகாளய அமாவாசையில், முன்னோர்களுக்கு, திதி, தர்ப்பணம் கொடுக்க, கோவில் நந்தவனத்தில் அதற்கான இட வசதி, அர்ச்சகர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை, 5:00 முதல் மதியம், 1:00 மணி வரை, பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்கலாம். 150 ரூபாய் கட்டணம் செலுத்தி ரசீது பெற்று தர்ப்பணம் செய்ய வேண்டும். மகாளய அமாவாசை தவிர மற்ற நாட்களிலும் பக்தர்கள் காலை, 10:00 முதல் மதியம், 12:00 மணி வரை தர்ப்பணம் செய்ய அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அதேபோல் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலிலும், முன்னோர்களுக்கு, 'திதி' தர்ப்பணம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.