உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நபர் 2 ஆண்டுக்கு பின் கைது

பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நபர் 2 ஆண்டுக்கு பின் கைது

மேட்டூர்: பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டவரை, இரு ஆண்டுக்கு பின்பு போலீசார் கைது செய்தனர்.மேட்டூர், சதுரங்காடி சேகர் மகன் யுவராஜ், 29. இரு ஆண்டுக்கு முன்பு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைத்தனர். அதன்பின்பு ஜாமினில் வெளிவந்த அவர், இரு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். அவருக்கு, மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-1ல் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இரு ஆண்டுகள் தலைமறை-வாக இருந்த யுவராஜை, நேற்று மேட்டூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து காவலுக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !